பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம் – ஏப்ரல் 28
April 29 , 2020 1674 days 533 0
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது (ILO - International Labour Organization) பணியிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்றுக் கொள்வது குறித்தும் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சேவையின் பங்கு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினத்தைப் பயன்படுத்துகின்றது.
2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ILO நூற்றாண்டுப் பிரகடனமானது “பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பணி நிலைமைகள் என்பவை கண்ணியமான பணிக்கு அடிப்படை” என்று அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “தொற்றை நிறுத்து: பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உயிர்களைக் காக்கும்” என்பதாகும்.
இது 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1996 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 28 ஆம் தேதியை இறந்தவர்கள் மற்றும் காயம்பட்ட தொழிலாளர்கள் ஆகியோருக்கான சர்வதேச அனுசரிப்பு தினமாகவும் அனுசரிக்கின்றது.